31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

என்னென்ன தேவை?

வாழைக்காய் – 1,
குடைமிளகாய் – 1/4 கிலோ,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 3 பல்,
தனியா – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1 ,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 1/2 டீஸ்பூன்,
தோல் நீக்கிய வேர்க்கடலை – 25 கிராம்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தனியா, காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம், வெள்ளை எள், வேர்க்கடலை அனைத்தையும் வறுத்து பொடி செய்யவும். இஞ்சி, பூண்டை நசுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைக்காய், குடைமிளகாய் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அதில் நசுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின் பொடித்த பொடியை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

Related posts

சுவையான மாங்காய் ரசம்

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

கண்டந்திப்பிலி ரசம்

nathan

வெங்காய ரசம்

nathan

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ பெண்களுக்கு ஆலோசனைகள்

nathan

கிரீன் சில்லி சாஸ்,சமையல் குறிப்புகள்..,

nathan

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan