தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் பாக்கெட் – மூன்று
இறால் – பத்து
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பீன்ஸ் – ஆறு
கேரட் – ஒன்று
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பட்டர் – நான்கு தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை :
பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இறாலை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
நூடுல்ஸை மூன்று பாக்கெட்டுக்கு ஆறு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு நுடுல்ஸை உதிர்த்து போட்டு அதில் உள்ள மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிட்டு குழையாமல் இரண்டு மூன்று நிமிடத்திற்குள் வடித்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி வைக்கவும்.
வாணலியை காய வைத்து அதில் எண்ணெய் விட்டு கேரட் தனியாக, பீன்ஸ் தனியாக சிட்டிகை உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து விட வேண்டும்
அதே வாணலியில் கொஞ்சமாக பாதி பட்டர் போட்டு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை பொடியாக நறுக்கி அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டவும்.
பிறகு அதில் வதக்கி வைத்துள்ள காய், வடித்து வைத்துள்ள நூடுல்ஸ் போட்டு மீதி உள்ள பட்டரையும் போட்டு மிளகு தூள் தூவி கிளறி இறக்கவும்.