கூந்தல் அடர்த்தியாகவும் , நீண்டு வளரவும் எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் வளரனுமே என கவலைப்படுகிறீர்களா? நம்மில் பெரும்பாலோனோர் 2 வாரத்திலேயே பயனளிக்க வில்லை என எந்த ஒரு பராமரிப்பு குறிப்பையும் மேற்கொண்டு தொடர மாட்டார்கள். அது தவறு.
படிப்படியாகத்தான் கூந்தல் தன் பாதிப்புகளை சரி செய்து கொள்ளும். அதற்கு போதிய ஊட்டமும், தூண்டுதலும் நாம் தந்தால், விரைவில் வேர்க்கால்கள் பலம்பெற்று பாதிப்புகளை சரி செய்து கூந்தல் வளர ஆரம்பிக்கும்.
வாரம் ஒருமுறை இந்த ஆலிவ் மாஸ்க் உபயோகப்படுத்திப் பாருங்க. முடி உதிர்தல் நாளுக்கு நாள் குறைவதை காண்பீர்கள். தொடர்ந்து உபயோகித்தால் அடர்த்தியான நீளமான கூந்தல் நிச்சயம் வளரும் என்பது உறுதி.
தேவையானவை : ஆலிவ் எண்ணெய் – கால்கப் தேங்காய் எண்ணெய் – கால் கப் முட்டை – 1 தேன் – 3 ஸ்பூன்.
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் , ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலையில் வேர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவி, 45 நிமிடங்கள் காய விடவும். பின்னர் ஷாம்பு போட்டு அல்லது சீகைக்காய் போட்டு குளிக்கலாம்.
இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கூந்தல் மிருதுவாகும். பளபளப்பாகும். பொடுகு, அரிப்பு போக்கிவிடும். முடி உதிர்தல் நின்று விடும்.