என்னென்ன தேவை?
பெரிய விதையில்லா கத்தரிக்காய் – 3 அல்லது 4,
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 30 மிலி,
உப்பு – தேவைக்கேற்ப,
சீஸ் – 50 கிராம்,
ஃப்ரெஷ் க்ரீம் – தேவைப்பட்டால்,
எள்ளு – 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கத்தரிக்காயை நீளவாக்கில் 4 துண்டுகளாக்கவும். இதை கடுகு எண்ணெயில் ஊற வைக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதனை கிரில் பேனில் வைத்து பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும். இத்துடன் சீஸ் சேர்க்கவும். வறுத்த எள்ளை மேலே தூவவும். இதை ஃப்ரெஷ் க்ரீமுடனும் பரிமாறலாம்http://img.dinakaran.com/samayalnew/S_image/sl4246.jpg