33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
face4 22 1471864389
சரும பராமரிப்பு

வெயிலால் கருமையா? எண்ணெய் சருமமா? இதை ட்ரை பண்ணுங்க!!

மஞ்சள் அழகு ஆரோக்கியம் இரண்டிலுமே உள்ள அவதார மூலிகை. இது சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். முகப்பரு, மரு, கரும்புள்ளி ஆகியவற்றை விடைப் பெறச் செய்துவிடும். முக்கியமாக வெயிலால் உண்டாகும் கருமையை போக்கிவிடும்

மஞ்சளும் குங்குமப் பூ போன்றுதான். வெயிலில் பூசி சென்றால் முகம் கருத்துவிடும். ஆனால் இரவுகளில் அல்லது வீட்டிலிருக்கும்போது அதனை உபயோகித்தால் நிறம் தரும். கருமையை அகற்றும். முக்கியமாய் முகப்பருக்கள் தொல்லை கிட்டத்திலும் நெருங்காது.

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு முகப்பருக்களின் தொல்லை, கரும்புள்ளி அழுக்கு என சேரும். அவர்களுக்கு தெ பெஸ்ட் என சொல்லக் கூடிய ஃபேஸியல் மாஸ்க் இது. அப்படிப்பட்ட மஞ்சளைக் கொண்டு எப்படி ஃபேஸியல் மாஸ்க் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை : மஞ்சள் – 1 டீ ஸ்பூன் க்டலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு _ சில துளிகள் தயிர் – தேவையான அளவு

மஞ்சளில் கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இவற்றை பேஸ்ட் போலாக்க சிறிது தயிர் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தேய்த்து காய வையுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் வாரம் 3 முறை உபயோகியுங்கள். மிகவும் பலனளிக்கும். மாசு மருவற்ற சருமம் உங்களுடையதாக இருக்கும். முயன்று பாருங்கள்.

face4 22 1471864389

Related posts

கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?

nathan

கழுத்தைப் பராமரிக்க

nathan

வசிய மூலிகைப் பற்றி தெரியுமா?அதெப்படி உங்களுக்கு நன்மை தரும்? உங்களுக்காக ஒரு அரிய சித்த வைத்தியம்!!

nathan

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதனால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்!!!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்க

nathan

பழங்கள் அழகும் தரும்

nathan

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு டிப்ஸ் !!

nathan

பளபள சருமத்துக்கு பப்பாளி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தின் அழகை அதிகரிக்கும் உணவுகள்!

nathan