24.4 C
Chennai
Thursday, Nov 20, 2025
6XjATc1
சைவம்

வெஜிடபிள் கறி

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு, நூல்கோல், டர்னிப், தக்காளி, கோஸ், பச்சைப் பட்டாணி, பிராக்கோலி, வெங்காயம், பீன்ஸ், கேரட் மற்றும் விருப்பமான காய்கறிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கிண்ணம்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – ½ டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
மிளகுத்தூள், மல்லித்தழை – சிறிதளவு.


எப்படிச் செய்வது?

காய்கறிகளை ஒரே அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது வதங்கியதும் மஞ்சள், உப்பு, கரம் மசாலா, மிளகாய், மிளகுத்தூள் ேசர்த்து வதக்கி காய்கள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிதமான தீயில் சமைக்க வேண்டும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் மிதமான தீயில் வதக்கவும். மேலும் காய்கள் நறுக் என்றும் உதிர் உதிராகவும் இருந்தால் சுவையான வெந்தய சாதத்திற்கு நன்றாக இருக்கும். மல்லித் தழை தூவி காய்கறிகளை இறக்கி சூடாகப் பரிமாறவும்.6XjATc1

Related posts

பச்சை பயறு கடையல்

nathan

முருங்கைக்காய் கூட்டுச்சாறு

nathan

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் தக்காளி தொக்கு

nathan

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan

தயிர்சாதம்

nathan

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan

சுவையான ட்ரை ஃபுரூட் புலாவ்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan