14 1473849555 apricot
சரும பராமரிப்பு

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

சருமத்தில் வரிவரியான தழும்பு பல காரணங்களால் ஏற்படும். உடல் எடை குறையும்போது, பிரசவம் ஏற்படும்போதும் உண்டாகும். விரிந்த சருமம் சுருங்குவதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புதான் அந்த வரிவரியான தழும்பு. இது தோள்பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் உண்டாகும்.

இந்த தழும்புகளை ஒரு நாளில் மறைய செய்யும் மேஜிக் எங்கும் இல்லை. விளம்பரங்களில் வருவது எல்லாம் வணிக வளர்ச்சிக்கே தவிர எந்தவிதமான உபயோகமும் இல்லை. இயற்கையான பொருகளை தினமும் தொடர்ந்து தவறாமல் உபயோகித்தால், நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இவை அற்புதமான பலனைத் தரும்பவை. தொடர்ந்து உபயோகித்தால் நல்ல பலனைத் தரும். அப்படியான இயற்கைப் பொருட்களைப் பார்க்கலாம்.

சோற்றுக் கற்றாழை : சோற்றுக் கற்றாழை தழும்புகளை அகற்றுக் குணங்களைப் பெற்றவை. தினமும் கற்றாழையின் சதையை எடுத்து வயிற்றுப் பகுதியில் இருக்குமிடத்தில் தடவுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து உபயோகிக்கும்போது நல்ல பலனைத் தரும்.

கோகோ பட்டர் : கர்ப்பமாக இருக்கும்போதே கோகோ பட்டரை தினமும் உபயோகித்து வந்தால், பிரசவத்திர்கு பின் தழும்புகள் இல்லாமல் முழுவதும் மறைந்துவிடும். அதனை இரவில் உபயோகிப்பது சிறந்தது. தொடர்ந்து உபயோகித்தால் தழும்புகள் மறைவதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள்

எலுமிச்சை சாறு+ வெள்ளரி சாறு : எலுமிச்சை சாறு தழும்புகளை மறையச் செய்வதில் சிறந்தது. எலுமிச்சை சாறு எடுத்து அதில் சம அளவு வெள்ளரிக்காய் சாறை கலந்து தழும்புகலின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் இந்த இரண்டுமே தழும்புகளை மறையச் செய்பவை. சம அளவு பாதாம் எண்ணெயில் தேங்காய் என்ணெய் கலந்து அவற்றில் சிறிது மஞ்சள் சேர்த்து வயிற்றில் தடவி 15 நிமிடம் ஊறிய பின் குளித்து வந்தால் தழும்புகள் முழுவதும் மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

அப்ரிகாட் மாஸ்க் : ஆப்ரிகாட் பழத்திலுள்ள விதையை எடுத்தபின் சதையை நன்றாக மசித்து தழும்பின் மீது தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும் அல்லது ஆப்ரிகாட் எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அந்த எண்ணெய் சிறிதளவு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து உபயோகித்தால் விரைவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

14 1473849555 apricot

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவ்விங் செய்த பிறகு சருமத்தில் உள்நோக்கி வளரும் முடிகளை தடுப்பது எப்படி?

nathan

மேக்கப் போடுவதில் மட்டுமல்ல கலைப்பதிலும் கவனம் அவசியம்

nathan

எந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம்

nathan

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்

nathan

20 ப்ளஸில் உங்கள் அழகினை பாதுகாக்க, நீங்கள் கவனிக்க வேண்டியவை ..

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

இது இரண்டு ஸ்பூன் மட்டும் இருந்தால் போதும்! நீங்கள் பேரழகு ஆகலாம் தெரியுமா!

nathan

உலகமே பார்த்து பயப்படும் புற்றுநோயை அழிக்கும் சக்தியை கொண்ட இந்த பழம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு…

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan