27.1 C
Chennai
Saturday, Aug 2, 2025
potato masiyal 13 1465805231
சைவம்

மதுரை உருளைக்கிழங்கு மசியல்

உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது மதுரை உருளைக்கிழங்கு மசியலின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து தோலுரித்தது) எண்ணெய் – 1/4 கப் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது பூண்டு – 6 பற்கள் வெங்காயம் – 1 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும். பிறகு கடலை மாவு சேர்த்து 5-8 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், மதுரை உருளைக்கிழங்கு மசியல் ரெடி!!!

potato masiyal 13 1465805231

Related posts

பனீர் பிரியாணி

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

வெண்டைக்காய் பொரியல்

nathan

குடைமிளகாய் சாதம்

nathan

உங்களுக்காக பூண்டில் செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்

nathan

கார்லிக் பனீர்

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan