தேவையானவை
- இரு சமபக்க முக்கோண துணி (11.செ.மீ) – 24 (விரும்பிய 3 நிறங்களில் 8+8+8=24)
- சதுர துணி (9.செ.மீ) – 4
- பார்டருக்கு:
- சதுர துணி (5.செ.மீ) – 4
- நீள்செவ்வக துணி (5 செ.மீ – 35.செ.மீ ) – 4
- ஜிப்
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் குஷனின் முன்பக்கத்திற்கானவை. குஷனின் முன் பக்கம் தைத்தபின் அதற்கேற்ற அளவில் பின் பக்கத்திற்கும் துணியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த அளவுகளில் 40 செ.மீ அளவு குஷன் கவர் தயார் செய்யலாம். படத்தில் காட்டியபடி துணிகளை வெட்டிக் கொள்ளவும். (பொதுவாக இதற்கு அளவுகள் தேவைப்படாது. குஷனின் அளவிற்கேற்ப துணியை வெட்டிக் கொள்ளலாம்).
ன் டிசைனுக்கு பொருத்தமாக அனைத்து முக்கோணங்களையும் இரண்டிரண்டாக இணைத்து தைக்கவும்
இதேபோல் 12 சதுர துண்டுகள் கிடைக்கும். அவற்றை அயர்ன் செய்யவும். ஓரத்திலுள்ள பிசிறுகளை வெட்டிவிடவும்.
பிறகு சதுரங்களை படத்தில் உள்ளது போல் இணைத்து தைக்கவும்.
தைத்த பின்னர் இவ்வாறு இருக்கும்
பார்டருக்காக வெட்டி வைத்துள்ள சதுர துணியையும், நீள்செவ்வக துணியையும் எடுத்துக் கொள்ளவும்.
அவற்றை இதேபோல் ஒரங்களில் இணைத்து தைக்கவும். இப்போது முன் பக்கம் ரெடி
பின் பக்கத்திற்கு 42 செ.மீ.அளவில் சதுர துணியை எடுத்து, இதேபோல் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு துணியையும் ஜிப் வைத்து இணைத்து தைத்து குஷனின் பின் பக்கத்தை தயார் செய்யவும்.
தயார் செய்த முன் பக்கத்தையும், பின் பக்கத்தையும் இணைத்து தைக்கவும்.
இதேபோல் இரண்டு தயார் செய்து உங்கள் வீட்டு சோபாவை அலங்கரிக்கலாம். இவ்வாறு மூன்று தயார் செய்தால் டேபிள் ரன்னராக பயன்படுத்தலாம். நடுவில் ஸ்பாஞ்ச் வைத்து தைத்து கால்மிதியாக உபயோகிக்கலாம்.
அழகிய பேட்ச் ஒர்க் குஷன் கவர் ரெடி.