30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அசைவ வகைகள்

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

சிலருக்கு காரசாரமாக சாப்பிட மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மிகவும் சிம்பிளான காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
இறால் – 250 கிராம்
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப்

ஊற வைப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 7 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதில் உள்ள எண்ணெயில் பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நன்றாக கொதித்து கிரேவி திக்கானதும் இறுதியில் இறால் சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காரசாரமான இறால் மசாலா ரெடி!!!

* இதை சப்பாதி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Related posts

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

nathan

செட்டிநாடு சிக்கன் கறி

nathan

சூப்பரான இறால் தொக்கு செய்ய

nathan

முந்திரி சிக்கன் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

சிக்கன் பாப்கார்ன்

nathan