31.1 C
Chennai
Tuesday, Jun 25, 2024
How To Cure Cracked Heels The Natural Way
கால்கள் பராமரிப்பு

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக.
* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.
* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.
* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.
* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .
* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.How To Cure Cracked Heels The Natural Way

Related posts

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

பாதங்களை பராமரிக்கும் ஸ்கரப்

nathan

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan

நடக்கும் போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்.

nathan

குதிகால் வெடிப்பை மறைய செய்யும் வீட்டு வைத்தியம்

nathan

வீட்டிலேயே எளிய முறையில் பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி?

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

nathan