28.8 C
Chennai
Thursday, Oct 9, 2025
sl4122
சைவம்

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

என்னென்ன தேவை?

தோல் உரித்த மொச்சை – 1/4 கப்,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
இஞ்சி -பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
உருளைக்கிழங்கு – 1,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்ப்பால் – 1/4 கப்,
கொத்தமல்லி – அலங்கரிக்க,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க…

சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1 டீஸ்பூன்,
கிராம்பு – 2,
பட்டை – 1/4 துண்டு,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஆறியதும் பொடி செய்யவும். மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கவும். அதில் இப்போது பொடியாக அரிந்த தக்காளி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். ஊற வைத்த அரிசி மற்றும் மொச்சை சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி 11/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இக்கலவையை பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். கொத்தமல்லித் தழை தூவி நன்கு கிளறி விடவும். சுவையான சத்தான மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி தயார். சூடாக ஏதேனும் ஒரு ரெய்தாவுடன் பரிமாறவும்.sl4122

Related posts

புதினா சாதம்

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

அரைக்கீரை மசியல்

nathan

பல கீரை மண்டி

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

nathan

கொத்தமல்லி சாதம் tamil recipes

nathan

தனியா பொடி சாதம்

nathan

கருணைக்கிழங்கு மசியல்

nathan

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan