25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
vendhaya 2621302f
சிற்றுண்டி வகைகள்

வெந்தய களி

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 300 கிராம்
உளுந்தம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 300 கிராம்

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

இரவே ஊற வைத்த வெந்தயத்தை உளுந்தம் பருப்புடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசி மாவுடன் இதனைக் கலந்துகொள்ள வேண்டும்.

தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, வடைச் சட்டியில் ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

மாவுக் கரைசல் கெட்டியாக களிபோலத் திரண்டு வரும்போது தீயின் அளவைக் குறைத்து சர்க்கரையைத் தூவிக் கிண்ட வேண்டும்.

அவ்வாறு கிண்டும் போது கட்டிகள் வராத வண்ணம் நன்கு கிண்ட வேண்டும்.

தேவையான அளவில் உருண்டைகாளக உருட்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் வெந்தயக் களி தயார்.

உடல் சூடு, வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.vendhaya 2621302f

Related posts

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி?

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

கம்பு புட்டு

nathan

வெஜ் சாப்சி

nathan

அரிசி ரொட்டி

nathan

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan

ஃபலாஃபெல்

nathan

கொள்ளு மசியல்

nathan