26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
upp 2
சிற்றுண்டி வகைகள்

திணைஅரிசி காய்கறி உப்புமா

தேவையான பொருட்கள் :
திணை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 இரண்டாக கீறவும்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:-
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
* திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.upp 2
* சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா ரெடி.

Related posts

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

ஸ்பெஷல் கொழுக்கட்டை

nathan

கறிவேப்பிலை வடை

nathan

தினை இனிப்புப் பொங்கல்

nathan

வேர்க்கடலை போளி

nathan

ஹரியாலி பனீர்

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

அன்னாசி பச்சடி

nathan