உதடுகள் வசீகரமாக இருந்தால் இன்னும் நம்மை அழகாக காண்பிக்கும். நீங்கள் அடிக்கடி லிப்ஸ்டிக் போட்டு உதடுகள் கருப்பாகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் கருமையை போக்கி சிவந்த உதடுகள் கொடுக்கும். தினமும் தவறாமல் செய்து வாருங்கள். விரைவில் பலன் பெறுவீர்கள்.
தேன் : சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும்.
வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.
கற்றாழை ஜெல் : கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.
மில்க் க்ரீம் : மில்க் க்ரீம்மில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அவகேடோ : அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளில் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.
தயிர் : தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.