28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
22 1469171112 6 shampoo
தலைமுடி சிகிச்சை

கொட்டும் தலைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க…

தலைமுடி உதிர்வதை எப்படி தடுப்பது என்று வழிகளைத் தேடிக் கொண்டிருப்பவரா? உங்கள் தலைமுடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? நிபுணர்கள், தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம், கர்ப்பம், இறுதி மாதவிடாய், எடை குறைவு போன்றவற்றால் தான் தலைமுடி உதிர்வதாக கூறுகின்றனர்.

ஏனெனில் இந்நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது. மேலும் பலர் தங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்த நிறைய தலைமுடி பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதோடு, சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய ட்ரிக்ஸைப் பின்பற்றினால், உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ஷாம்பு
நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் pH அளவு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிலும் பேபி ஷாம்புவைப் பயன்படுத்துவது என்பது சிறந்தது. பேபி ஷாம்புவில் கெமிக்கல்கள் குறைவாக இருப்பதால், தலைமுடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதோடு அப்படி பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ரோஸ்மேரி எண்ணெய் ஷாம்புவுடன் முதலில் சேர்க்க வேண்டியது ரோஸ்மேரி எண்ணெயைத் தான். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வலிமை அளிக்கும்.

எலுமிச்சை எண்ணெய் இரண்டாவதாக சேர்க்க வேண்டிய பொருள் எலுமிச்சை எண்ணெய். இந்த எண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் ஸ்கால்ப்பிற்கு புத்துணர்ச்சி வழங்கக்கூடியது.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மூன்றாவதாக ஷாம்புவுடன் சேர்க்க வேண்டியது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல். இது மருந்து கடைகளில் கிடைக்கும். வைட்டமின் ஈ தலைமுடி உதிர்வதை எதிர்த்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஷாம்பு தயாரிக்கும் முறை முதலில் ஷாம்புவுடன், 10 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 துளிகள் எலுமிச்சை எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலினுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை பின் இந்த நேச்சுரல் ஷாம்புவை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முக்கியமாக இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவைப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.

22 1469171112 6 shampoo

Related posts

தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!

nathan

விசித்திரமா இருக்கே..!! தக்காளி முடி உதிர்வதைக் குறைக்குமா ?

nathan

ஈஸ்ட் வாங்கி வச்சுக்கோங்க! வாரம் 2 நாள் யூஸ் பண்ணினா உங்க முடி நீளமா, அடர்த்தியா மாறும் தெரியுமா!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி செரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல்வேறு பயன்கள்

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

அடர்த்தியான தலைமுடிக்கு

nathan

சூப்பர் டிப்ஸ்.. கீழ ஊத்தற இந்த தண்ணி முடிய நீளமாவும் அடர்த்தியாவும் வளர வைக்கும் தெரியுமா?

nathan

முடி கொட்டும் பிரச்னையா?

nathan

பெண்களே முடி நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan