26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
lipstick 19 1468926744
உதடு பராமரிப்பு

உதட்டிற்கு அழகு சேர்க்கும் லிப் பாம் ! தயாரிக்க ஈஸி !

20 வருடங்களுக்கு முன்பு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு லிப்ஸ்டிக் போடும் காலம் போய், தினமும் கல்லூரி, அலுவலகம் என அன்றாடம் போட்டுக் கொண்டு செல்கிறோம். இதனால் உதடு எளிதில் வறண்டு, கருப்பாக மாறியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு காரணம் நீங்கள் போடும் லிப்ஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் கலந்த பொருட்கள் தான். இவை சருமத்தில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். எளிதில் கருப்பாகிவிடும்.

இயற்கையாகவே நீங்கள் சிவப்பழகு பெற வீட்டிலேயே நீங்கள் லிப் பாம் தயாரிக்கலாம். இது சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். ஈரப்பதம் அளிக்கும். உதட்டிற்கு சிவந்த நிறமளிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை : தேன் மெழுகு – 2 டீஸ்பூன் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் – சில துளிகள் புதினா எண்ணெய் – 1 துளி. பெட்ரோலியம் ஜெல்லி – 2 ஸ்பூன் மாதுளை அல்லது பீட்ரூட் சாறு – 1 டீஸ்பூன்

முதலில் தேன் மெழுகு மற்றும் பாதாம் எண்ணெயை அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து உருகும் அளவிற்கு லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் நன்றாக கலக்கி இதில் புதினா எண்ணெய் ஒரு சொட்டு விடவும்.

அதன்பின் மாதுளை அல்லது பீட்ரூட் சாறினை கலந்து அவற்றை ஒரு டப்பியில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உடனடியாக ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம்.

தேவைப்படும்போது உபயோகித்து மீண்டும் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால், நிறைய நாட்களுக்கு வரும். உருகாது. தினமும் உபயோகித்தால் உங்கள் உதட்டின் கருமை மாறி, அழகு பெறும். முயன்று பாருங்கள்.

lipstick 19 1468926744

Related posts

லிப்ஸ்டிக் போடுவதனால் உதடுகளில் கருமையா? அப்ப இவற்றை உபயோகிங்க!!

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க எளிய குறிப்புகள் !!

nathan

உதடு சிவக்க

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை!

nathan

குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?

nathan

உதட்டைச் சுற்றி புண்ணா இருக்கா? அதை விரைவில் சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…

nathan

உதட்டில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் இயற்கை குறிப்புகள்

nathan

உதட்டுக்கு அழகு உடலுக்கு கேன்சர்!

nathan