15 1397543376 avial 26 1456472361
சைவம்

முருங்கைக்காய் அவியல்

முருங்கைக்காய் சீசன் ஆரம்பமாகப் போவதால், மார்கெட்டுகளில் இதை அதிகம் காண்பீர்கள். இதுவரை முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதை அவியல் செய்தாலும் அற்புதமாக இருக்கும்.

இங்கு அந்த முருங்கைக்காய் அவியலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் – 2 (துண்டுகளாக்கப்பட்டது) உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு… தேங்காய் – 1 கப் வரமிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிது சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு… தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியில் முருங்கைக்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த அரைத்த மசாலாவை வாணலியில் உள்ள முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து மற்றொரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்காய் அவியல் ரெடி!!!

15 1397543376 avial 26 1456472361

Related posts

ஸ்பைசியான பன்னீர் 65 செய்வது எப்படி

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

nathan

கட்டி காளான்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan