ஆண்களுக்கு அழகே தாடி தான். தாடி வைத்திருக்கும் ஆண்களால் தான் பெரும்பாலான பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய தாடி இளம் வயதில் கருமையாக இருந்தால் தான் நல்ல தோற்றத்தைத் தரும்.
சிலர் நடிகர் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் பிடிக்கும் என்று வைக்கலாம். ஆனால் அது அஜித்துக்கு நல்ல தோற்றத்தை தருமே தவிர, நீங்கள் வைத்தால் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தான் தரும்.
தாடி வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை காரணமாக வரும் வெள்ளை தாடியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் ஊட்டச்சத்துக் குறைபாடு, அதிகமாக மது அருந்துதல், மன அழுத்தம், போன்றவற்றால் வரும் நரை முடியை மீண்டும் கருமையாக்க முடியும்.
இங்கு வெள்ளை தாடியை கருமையாக்கும் மற்றும் அடர்த்தியாக வளர வைக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெள்ளை முடியை போக்க உதவும். அதற்கு 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்த எண்ணெய் கொண்டு தாடியை 3-5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
கறிவேப்பிலை 100 மிலி நீரில், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீர் பாதியானதும் இறக்கி, குளிர வைத்து, அந்நீரை தினமும் குடித்து வந்தால், வெள்ளை தாடி மட்டுமின்றி, வெள்ளை முடியும் மறையும்.
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் 8-10 கறிவேப்பிலையை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனைக் கொண்டு 5 நிமிடம் தாடியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி 8-10 கறிவேப்பிலையை 100 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, நீர் பாதியாக வந்ததும், அதில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பானதும் அதனைப் பருக வேண்டும். இதனாலும் நரைமுடி மறையும்.
பசு வெண்ணெய் சுத்தமான பசு வெண்ணெயைக் கொண்டு தினமும் தாடியை 3-5 நிமிடம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நரைத்த தாடி கருமையாவதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
கற்றாழை கற்றழை ஜெல் மற்றும் பசு வெண்ணெயை சரிசம அளவில் எடுத்து, தாடியில் தடவி மேலும் கீழுமாக 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வெள்ளையான முடி கருமையாகும்.
மோர் மற்றும் கறிவேப்பிலை 1 டேபிள் ஸ்பூன் மோருடன், 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றினை சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அக்கலவையைக் கொண்டு தாடியை மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இச்செயல் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை நரைத்த தாடிக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். இதனால் முடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, கருமையாவதோடு, அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.