cream 14 1468493419
சரும பராமரிப்பு

உங்கள் சருமம் மிளிர உத்திரவாதம் அளிக்கும் சாக்லேட் -புதினா ஸ்க்ரப் !

சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என சந்தேகம்தான். அதுவும் பெண்களுக்கு ஒரு சாக்லேட் கொடுத்தால் போதும். வேண்டும் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அப்படி பிடித்தமான சாக்லெட் பற்றி ஏதாவது நல்ல விஷயம் சொன்னால் குஷிதானே!

அடர் பிரவுன் நிற சாக்லேட் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதய நோய்களை தடுக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சாக்லேட் ஸ்க்ரப் : இந்த சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமத்தில் களையே இல்லையே என யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஸ்க்ரப் இதுதான்.

இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இவற்றில் பேக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும்.

தேவையானவை : பொடித்த சர்க்கரை – அரை கப் நாட்டுச் சர்க்கரை – அரை கப் புதினா எண்ணெய் – 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் – அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – அரை கப்

சர்க்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதிலுள்ள புதினா எண்ணெய் முகப்பருக்களை விரட்டும். கருமையை நீக்கிவிடும். சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும். இவை அனைத்தும் சேர்ந்த கலவை முகத்தில் அற்புதம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஸ்க்ரப் சிறிது எடுத்து, முகம் , கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம். வாரம் மூன்று முறை செய்யுங்கள். பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர்வதற்கு இந்த ஸ்க்ரப் உத்திரவாதம்

cream 14 1468493419

Related posts

தேங்காயில் அழகு குறிப்புகள்

nathan

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பப்பாளி வைத்தியம்!…

sangika

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்

nathan

பழங்கள் அழகும் தரும்

nathan

இளமையாகத் தோன்ற ஆசையா? அழகு குறிப்புகள்.!

nathan

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ 10 பயனுள்ள ஆயுர்வேத தீர்வுகள்

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan