தேவையானவை:
கம்பு ரவை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 31/2 கப்
செய்முறை
1.முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
2.பிறகு கம்பு ரவையையும் போட்டு ஒரு கிளறவும்.
3.பின்பு அடுப்பைக் குறைத்து தண்ணீரை ஊற்றி, உப்பை போட்டு கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும்.
4.நன்கு வெந்தவுடன் இறக்கி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.