நாளை சன்டே(ஞாயிற்று கிழமை) ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 500 கிராம்
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – 3 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
மைதா மாவு – 3 மேஜைக்கரண்டி
பிரட் தூள் – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை :
* எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.
* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.
* பின்னர் கொத்தமல்லித் தழை, எலுமிச்சை சாறு, மசித்த வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
* ஆறியதும் அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டி வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.
* மைதா மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுத்து புரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும். அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
* பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
* நாளை சன்டே(ஞாயிற்று கிழமை) ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.