கருவளையம் ஏன் வருகிறது?
கண்களில் ரத்த ஓட்டமில்லாமல் இருக்கும்போது, அங்கே கருவளையம் ஏற்படும். உடலில் சூடு அதிகமாவதுடன், கண்களும் எளிதில் சோர்வடைகின்றன. உடல் சூடானது சோர்வடைந்த கண்கள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுவதால் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுகிறது.
அதிக நேரம் சக்தி வாய்ந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும், போதிய தூக்கமில்லாமலிருந்தாலும் கருவளையம் ஏற்படும்.
கருவளையம் எப்படி சரி செய்யலாம் : எலுமிச்சம்பழச் சாறுடன் துளசிச் சாறு சம அளவு சேர்த்து கண்களை சுற்றி தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
தேன், வாழைப்பழம், முட்டை வெண்கரு இவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து பின் குளித்து வர கருவளையம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் சம அளவு கலந்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் போய்விடும். பாலாடையை கண்களை சுற்றி போட்டு வர கருவளையம் சீக்கிரத்தில் மாறும்.
காரட் சாறு, தக்காளி பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.
பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பின் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து பூசி வர கருவளையம் மறைந்துவிடும்
பாதாம் எண்ணெயை பூசி வந்தால், கண்கள் தெளிவு பெற்று கண்களில் உள்ள கருவளையம் மறைந்து அழகாக காட்சி அளிக்கும்.
வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களின் மீது வைக்கவும். இதனால் கண்களில் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன் கண்ணை சுற்றியுள்ள கருவளையம் நீங்கும்.
பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து அதனை கண்களில் தடவி காய்ந்ததும் கழுவவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் அடர்ந்த கருவளையம் கூட போய்விடும்.