1477393182 833
கார வகைகள்

தீபாவளி பலகாரமான தட்டை செய்வது எவ்வாறு??

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – தேவையான அளவு
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

1477393182 833
செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஒரு துணியில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். இதே போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்.

Related posts

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

nathan

தேங்காய் முறுக்கு

nathan

சத்தான டயட் மிக்சர்

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

பட்டாணி பொரியல்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

சுவையான பீட்ரூட் பக்கோடா

nathan