32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
201610260839565552 Girls Stylish Mastani Dress SECVPF
மேக்கப்

சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி

பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன.

சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி
பண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடும், செட்டுகள் நிறைந்தவாறு உருவாக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு என பெண் குழந்தைகள் அணியும் ஆடை சற்று பிரம்மாண்ட தோற்றத்தை அளித்திட வேண்டும். அது மட்டுமின்றி அழகிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண சேர்க்கை, லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடு என அனைத்திலும் தனி கவனத்துடன் நேர்த்தியான நுணுக்க வேலைப்பாட்டுடன் ஆடைகள் உருவாகின்றன.

பெண் குழந்தைகளுக்கு என லெஹன்கா, அனார்கலி, சுடிதார், பிராக், பாவாடை – சட்டை, மாடர்ன் டிரஸ்ஸிங், ஜீன்ஸ் டி-ஷர்ட் என பலவிதமான ஆடைகள் உள்ளன. இவையனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட ஆடைகளாய் புதிய வடிவமைப்புகள் தரப்படும். அத்துடன் தீபாவளி ஸ்பெஷல் என்றவாறு சில ரகமும் வெளிவரும்.

தீபாவளிக்கு உகந்த பாரம்பரிய ஆடைகள் :

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிவது உண்டு. தீபாவளி என்பதில் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகள்தான் அணிவது உண்டு. அதாவது முன்பு பாவாடை சட்டை. பிறகு சுடிதார், பைஜாமா, அனார்கலி போன்றவை பாரம்பரிய ஆடைகளின் வரிசையில் இணைந்தன. சுடிதார் மற்றும் சல்வார் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனார்கலி போன்றவை வந்தன. தற்போது மஸ்தானி, சல்வார் நீட்ஸ், லெஹன்கா சோளி, பாட்டியாலா சூட்ஸ், ரிவர்சுபின் ஜாக்கெட் போன்றவை வந்துள்ளன.

புதிய நெட் லெஹன்கா சோளி ஆடைகள் :

பெண்களின் ஆடைகள் அதிக பளபளப்பும், பிரகாசமான வண்ணத்திலும் இருக்கும். லெஹன்கா ஆடைகளின் பாவாடை மற்றும் மேல் சோளி சட்டையும் அதற்கேற்ற துப்பட்டாவும் உள்ளன. இதில் பாவாடை அமைப்பு அதிக பிரகாசமான வண்ணத்துடன் நெட் துணிவகையில் தங்க சரிகை வேலைப்பாடு முழுமையாகவும், கீழ்புறம் அகலமான லேஸ் பார்டர் (அ) சரிகை பார்டர் கொண்டவாறு உள்ளது. இதற்கேற்ற மேல் சட்டை அமைப்பு இடுப்பு பகுதி வரை நீண்டவாறு கீழ்பகுதியில் பார்டர் உள்ளவாறு உள்ளது.

லெஹன்கா சோளி செட்டில் கூடுதலாக நெட் துணியிலான மெல்லிய கோட் அமைப்பு கொண்ட மாடல்களும் வருகின்றன. இதிலேயே சில வகைகள் இரட்டை பாவாடை அமைப்பு கொண்ட முழு ஆடை அமைப்பாய் உள்ளது. இதில் கீழ் வரை பெரிய பாவாடை மற்றும் மேல் சற்று உயர்ந்த குட்டை பாவாடை மேல்புறமாய் உள்ளவாறு உள்ளது. மேல் சட்டை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழகுடன் விளங்குகிறது.

புதிய வரவான மஸ்தானி :

திரைக்கு வந்த ஒரு பாலிவுட் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைதான் தற்போது மஸ்தானி என்றவாறு தீபாவளி புதிய வரவாக வந்துள்ளது. இது லெஹன்கா போன்றதும் அல்ல, சோளி அமைப்பும் அல்ல. இரண்டிலும் சற்று மாறுப்பட்ட ஆடை அமைப்பு. அதாவது மேல் சட்டை அமைப்பு கால் பகுதி வரை நீண்டவாறு உள்ளது. இதன் நடுவே ஸ்ட்ரெயிட் கட் உள்ளது. இதற்கு இணையாக கீழ் பகுதி பாவாடை அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி செய்ய கோட் அமைப்பும், ஸ்லீவ்லெஸ்-யும் கச்சிதமான தோற்றத்துடன் உள்ளன. மஸ்தானி ஆடை பெண் குழந்தைகளுக்கு மிடுக்கான தோற்றத்தையும், பிரம்மாண்ட அமைப்பையும் தரவல்லதாக உள்ளது. 201610260839565552 Girls Stylish Mastani Dress SECVPF

Related posts

மேக் அப்/ஒப்பனைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

nathan

லிப்.. லிப்.. லிப்ஸ்டிக்!

nathan

ஒப்பனை தூரிகை வழிகாட்டி

nathan

மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள் மற்றும் மேக்அப்

nathan

வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா

nathan

எளிமையான மேக்கப் டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

nathan

உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

nathan

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan