33.7 C
Chennai
Sunday, Jul 27, 2025
1450773222 1381
​பொதுவானவை

பைனாபிள் ரசம்

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் துண்டுகள் – 1/2 கப்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன் (வேக வைத்தது)
தக்காளி – 1
தனியாத் தூள் – 1/2 ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 6 பல்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கீற்று
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

பைனாப்பிளை சிறு சிறு துண்டுகளாக செய்து கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

தக்காளியை கரைத்து கொள்ளவும்.

செய்முறை:

புளி தண்ணீரில், வேகவைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகப் பொடி மற்றும் நறுக்கிய பைனாப்பிள், தக்காளி, நசுக்கிய பூண்டு, உப்பு, தனியாப் பொடி சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போடவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி, நுரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சுவையான சூப்பரான பைனாபிள் ரசம் ரெடி.1450773222 1381

Related posts

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

மோர் ரசம்

nathan

சிக்கன் ரசம்

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்

nathan

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan