29.6 C
Chennai
Sunday, Jul 26, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கோதுமை ரவை இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – அரை கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – அரை கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

* பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் கடலைபருப்பை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், கோதுமை ரவை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடம் வரை புளிக்க வைக்கவும்.

* கலந்த மாவை இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

* சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி ரெடி.

Related posts

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

மொறுமொறுப்பான… ரவா கட்லெட்

nathan

சுவையான கார்லிக் பிரட் ரெசிபி

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்

nathan

இடியாப்பம் சௌமீன்

nathan

சூப்பரான அரிசி பொரி உப்புமா

nathan

சவ்சவ் கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

nathan

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan