29.2 C
Chennai
Friday, May 17, 2024
201610110923316492 Let us know about gold jewelry SECVPF
ஃபேஷன்

தங்க நகையை பற்றி தெரிந்து கொள்வோம்

தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வதும், கவனம் கொள்வதும் மிகவும் அவசியம்.

தங்க நகையை பற்றி தெரிந்து கொள்வோம்
தங்க நகை வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வதும், கவனம் கொள்வதும் மிகவும் அவசியம். தங்கம் 24, 22 மற்றும் 18 கேரட்களில் கட்டியாகவும், காசாகவும், நகையாகவும் கிடைக்கிறது.

கேரட்:

தங்கத்தின் சுத்தத்தை குறிப்பது தான் கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கமும் அத்துடன் வேறு எந்த உலோகமும் சேர்க்காமல் இருந்தால் அது 24 கேரட் எனப்படுகிறது.

ஆபரணங்கள் செய்வதற்கு தங்கத்துடன் செப்பு, வெள்ளி அல்லது துத்தநாகம் கலந்தால் தான் அதற்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். ஆபரணங்கள் செய்த பின்பு உடையாமல் நீடித்து உழைக்கும். இதற்கென கிட்டதட்ட எட்டரை சதவிகிதம் தங்கத்துடன் மற்ற உலோகத்தை சேர்க்கும் போது அதன் சுத்தத்தன்மை 91.6% ஆக மாறி விடுகிறது. இதுவே 22 கேரட் ஆபரணத்தங்கமாகும். இதைத்தான் 916 கோல்ட் என்று சொல்கிறார்கள்.

இதேபோல் தான் மிகவும் நுணுக்கமான மெல்லிய இழைகள் நிறைந்த தங்க ஆபரண டிசைன்களுக்காக தங்கத்துடன் மேலும் அதிகமாக 25% மற்ற உலோகத்தை சேர்த்து செய்யப்படும் நகைகள் 18 கேரட் தங்கமாக கருதப்படுகிறது.

பிஐஎஸ் ஹால்மார்க்:

இந்திய அரசாங்கம் பீரோ ஆஃப் இன்டியன் ஸ்டான்டர்ட்ஸ் (பிஐஎஸ், என்ற அமைப்பை 1987 இல் தொடங்கியது. இந்த அமைப்பு மட்டுமே தங்கத்தின் சுத்தத்தை அங்கீகரித்து ஹால்மார்க் முத்திரை பதிக்கும் ஒரே அமைப்பாகும். நகைக்கடைக்காரர்கள் பிஐஎஸ் அமைப்பிடம் விண்ணப்பித்து பணம் செலுத்தி பிஐஎஸ் உரிமத்தை பெற்று, BIS என்ற எழுத்தை தங்கள் ஆபரணத்தில் பதிப்பார்கள்.

இந்த முத்திரை இருந்தால் தான் அது சுத்தமான 22 கேரட் அல்லது 916 தங்க நகையாகும். BIS முத்திரை பதிக்கப்பட்டு விற்கப்படும். நகைகளை பிஐஎஸ் அமைப்பு அவ்வப்போது சோதனை செய்யும், சோதனையில் அது சுத்தமாக இல்லாத பட்சத்தில் அந்த கடைக்கான பிஐஎஸ் உரிமம் ரத்து செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளில் பிஎஸ்ஐ முத்திரையை பார்த்து வாங்குவது அவசியம்.

நாம் வாங்கும் நகையை விற்க அல்லது மாற்ற செல்லும் போது பிஐஎஸ் முத்திரை இருந்தால் எந்த கடையிலும் அன்றைய தேதியின் தங்கத்தின் விலையில் விற்கலாம். 201610110923316492 Let us know about gold jewelry SECVPF

Related posts

உயரமான பாதணிகள் அணிந்து அழகாய் காட்சி அழிக்கும் பெண்களுக்கு…. இத படிங்க

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

எளிமையே சிறப்பு!

nathan

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???

nathan

அக்‌ஷய திருதியைக்கு நகை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

nathan

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

nathan

ஸ்லீவ்லெஸ் உடை… அடர் நிற லிப்ஸ்டிக் பெண்கள் – சமூக மதிப்பீடு என்ன?

nathan

லக லக லெக்கிங்ஸ்!

nathan