29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
201610111427187492 phuket fish recipe SECVPF
அசைவ வகைகள்

சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படி

சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முள் இல்லாத மீன் – 500 கிராம்
மைதா – 3 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1
தண்ணீர் – 1/2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – 2

செய்முறை :

* பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொண்டு அத்துடன் மைதா, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

* அடுத்து அந்த மசாலாவை மீன் துண்டுகள் மேல் பூசி அரை மணி நேரம் ஊற விடவும்.

* அரை மணி நேரம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, மிளகுபொடி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* சற்று திக்காக வந்தவுடன் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை இதில் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

* சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும்.201610111427187492 phuket fish recipe SECVPF

Related posts

புதினா ஆம்லேட்

nathan

கணவாய்ப் பொரியல்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

இறால் மசால்

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

செட்டிநாடு துண்டு மீன் குழம்பு

nathan

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

nathan

சிக்கன் பிரியாணி

nathan