27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
4 alomnd face pack 16 1466057468
முகப் பராமரிப்பு

முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை வேகமாக மறைக்க உதவும் வழிகள்!

உங்கள் முகத்தில் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகள் உள்ளதா? அதை வேகமாக மறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகள் என்னவென்று தேடிப் பின்பற்றுங்கள்.

ஒருவரது முகத்தில் முகப்பரு தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகள் அழகைக் கெடுக்கும் வண்ணம் இருக்கும். ஆனால் இவற்றை ஒருசில எளிய நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் வேகமாக மறைக்கலாம்.

இங்கு முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை வேகமாக மறைக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்து தெரிந்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

ஃபேஸ் பேக் #1

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் வேப்பிலை பொடியைப் போட்டு, க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள், புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

ஃபேஸ் பேக் #2

2 டேபிள் ஸ்பூன் ரோஜாப்பூ பொடியுடன் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள கருமைகள், முகப்பரு தழும்புகள் போன்றவை வேகமாக மறையும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை போட்டு வந்தால், முகம் பிரகாரசமாக காணப்படும்.

ஃபேஸ் பேக் #3

1 கையளவு புதினா இலைகளை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகப்பரு தழும்புகள் மாயமாய் மறையும்.

ஃபேஸ் பேக் #4

1/2 எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் 3 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகள் நீங்கும்.

4 alomnd face pack 16 1466057468

Related posts

முகத்தில் பருத்தொல்லையா? இதோ எளிய நிவாரணம்….

nathan

இதோ எளிய நிவாரணம்! காணாமல் போகட்டும் கருவளையம்!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…! மீறி போட்டால் ஆபத்து தான்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உதட்டைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க அட்டகாசமான வழிகள்!!!

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan