30.1 C
Chennai
Monday, Jul 28, 2025
sl3896
சிற்றுண்டி வகைகள்

காளான் கபாப்

என்னென்ன தேவை?

காளான் – 1 கப்,
கடலைப் பருப்பு – 1 கப்,
உதிர்த்த ஸ்வீட் கார்ன் – 1/4 கப்,
சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
ரொட்டித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு – 2,
காய்ந்த மிளகாய் – 2,
வெங்காயம் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது),
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 மூடி (இவற்றை தனியாக கலந்து வைக்கவும்).

எப்படிச் செய்வது?

காளானை நன்றாகக் கழுவி நறுக்கவும். சோளத்தையும் ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீர்விட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். கசகசா, சீரகத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஏலக்காய், கிராம்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நீர் சிறிது தெளித்து அரைக்கலாம். கடலைப் பருப்பு, வெந்த காளான், சோளமுத்தை உப்பு சேர்த்து மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா தூளைப் போட்டு பிரட்டி சோளமாவு, வேண்டுமெனில் மல்லித்தழை கலந்து வதக்கவும். உருண்டைகளாக இதை உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது ஊறவைத்திருந்த வெங்காயம், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் கலவையை இதன் மீது தூவி பரிமாறவும். sl3896

Related posts

இடியாப்பம் சௌமீன்

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan

பெப்பர் இட்லி

nathan

ப்ரெட் புட்டு

nathan

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan

வேர்க்கடலை போளி

nathan

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

அரிசி வடை

nathan