31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

கம்பு, பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது கம்பு, பாலக்கீரையை சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 200 கிராம்,
உப்பு – தேவைக்கு,
கரகரப்பாக திரித்த மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
பாலக்கீரை – 1 கப்,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
நெய் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 1/4 கப் + தேவைக்கு,

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு மாவை லேசாக வறுத்து, அதில் மிளகுத்தூள், பாலக்கீரை, ப.மிளகாய், வெங்காயம், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

* பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரித்து, ஒரு தட்டில் ஈரத்துணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரொட்டியை போட்டு சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இருபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

* நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

* சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி.

குறிப்பு: சரியான பதம் வரவில்லை என்றால் அதில் சிறிது ரவை அல்லது அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.

Related posts

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan

Brown bread sandwich

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தா

nathan

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

nathan