சத்து நிறைந்த ப்ரோக்கலி சூப்பை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ப்ரோக்கலி சூப்
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கலி – பாதி
ஆலிவ் ஆயில்/ வெண்ணெய் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று
பால் – கால் கப்
ரசப்பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
* வெங்காயம், பூண்டு வதங்கியதும் ப்ரோக்கலி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் ரசப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
* கலவை நன்கு வெந்து சுண்டி வந்ததும் பால் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.
* கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.
சுவையான ப்ரோக்கலி சூப் தயார்.