L2TaBBz
இனிப்பு வகைகள்

பூசணி விதை பாதாம் பர்பி

என்னென்ன தேவை?

பூசணி விதை (Pumpkin seeds) – 1/2 கப்,
பாதாம் – 1/4 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உப்பு சேர்க்காத பூசணி விதைகளை வாங்கி வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து, பொடி செய்து கொள்ளவும். பாதாமை மிதமான சுடுநீரில் 1 மணி நேரம் ஊற வைத்து தோல் எடுத்து நன்கு துடைத்து 1 மணி நேரம் உலர வைக்கவும். ஈரம் போன பிறகு அதையும் பொடித்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான கடாயில் சர்க்கரையை 150 மிலி தண்ணீர் கலந்து வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து நன்கு நுரைத்து கொதிக்க வேண்டும்.

பாகுபதத்திற்கு முந்தைய பிசுபிசுப்பு பதம் வரும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து பாதாம் மற்றும் பூசணி விதை பொடியை போட்டு கைவிடாமல் கிண்டவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கெட்டியாகி ஓரங்களில் நுரைத்து வரும்பொழுது நெய்யை விட்டு வேகமாக கிளறி நெய் தடவிய தட்டில் பரவலாக ஊற்றி சமப்படுத்தவும். சிறிது ஆறிய பிறகு கத்தியால் கீறி துண்டு போடவும். ஆறிய பிறகு வில்லைகளை பரிமாறவும்.L2TaBBz

Related posts

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

சுவையான கோதுமைப் பால் அல்வா

nathan

கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்!ஆஹா பிரமாதம்

nathan

பொட்டுக்கடலை உருண்டை

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

கடலை மாவு பர்பி

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

சுவையான பாதாம் லட்டு

nathan

ஜிலேபி

nathan