201609080814561998 Do you want to longest unbroken nail SECVPF
நகங்கள்

உடையாத நீளமான நகம் வேண்டுமா?

நகம் உடையாமல் நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்து பலன் பெறலாம்.

உடையாத நீளமான நகம் வேண்டுமா?
சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு எளிமையான டிப்ஸ் கீழே தரப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும். கால் விரல்களில் சிலருக்கு சொத்தை எற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன்
லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் – சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்201609080814561998 Do you want to longest unbroken nail SECVPF

Related posts

உங்களுக்காக சில டிப்ஸ்.. நகங்களை நீளமாக வளர்க்க …

nathan

நெயில் ஸ்பா பற்றி தெரியுமா?

nathan

நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா நகம் உடைவதைத் தடுக்க உதவும் நம்பகமான 7 வழிகள்!!!

nathan

நகங்கள் எளிதில் உடைகிறதா?

nathan

அழகைக் கூட்டும் நக ஓவியம்

nathan

நக அழகு சாதனங்கள்

nathan

நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள்!!

nathan

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan