25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
Moisturizers For Oily Skin
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

பொதுவாக பார்த்தால் எல்லோருடைய தோலும் ஓரே மாதிரியாகத் தான் இருப்பது போலத் தோன்றும். எப்படி முக அமைப்பு ஓரே மாதிரியாக இருப்பதில்லையோ அதே போல தோல் அமைப்பும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றிலும் பல வகைகள் உண்டு.skin_type_check

சாதாரண சருமம்(Normal skin)

இந்த சருமத்தை உடையவர்களுக்கு எந்த விதமான மேக்கப்பும், அழகு சாதனமும் ஒத்துக் கொள்ளும். இவர்களுக்கு பிரச்சனை இல்லை. அதனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட தேவையில்லை.

உலர்ந்த சருமம்(Dry skin)

எப்பொழுதும். தோல் வறட்சியாக காணப்படும். இதற்கு முகத்தை க்ளென்சிங் மில்க் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை கைகளில் எடுத்துக் கொண்டு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வட்டமாக தேய்க்க வேண்டும். மூலிகை கலந்த கிளென்சர், மாய்சரைசர் உபயோகப்படுத்தலாம். மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களில் பக்க விளைவுகளோ எந்தவிதத் தீங்கோ ஏற்படாது.

எண்ணெய்ப் பசை சருமம்(Oily skin)

எவ்வளவு மேக்கப் போட்டாலும் அடிக்கடி முகத்தை கழுவினாலும் எப்போதும் எண்ணெய்ப் பசையுடன் காணப்படும். இந்த சருமம் உள்ளவர் கிளென்சர் உயயோகிக்கலாம். இது எண்ணெய்ப் பசையை குறைக்கும். இவர்கள் அட்வான்ஸ் கிளென்சரும் டோனர் போட வேண்டும். இதனால்  அழுக்கு போகும். எண்ணெய்ப் பசை அதிகம் வெளியில் தெரிவதில்லை. எண்ணெய்ப் பசை அதிகம் சருமத்துக்கு மாய்சரைர் (ஈரப்பதம்) தேவை. எனவே 2 நாட்களுக்கு ஒரு முறை நீரை அடிப்படையாக கொண்ட மாய்சரைர் (அ) ஆயில் ப்ரீ மாய்சரைசர் உபயோகப்படுத்தினால் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

காம்பினேஷன் வருமம் (இரண்டும் கலந்தது)(Combination skin )

அதாவது ஒரு பகுதி எண்ணெய்ப் பசையுடனும் மறுபகுதி உலர்ந்தும் காணப்படும். அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து உலர்ந்த சமுமம் எங்கு உள்ளது. எண்ணெய்ப் பசை சருமம் எங்கு உள்ளது என்று கண்டறிய வேண்டும். பின் அதற்கு தகுந்த மாதிரி மேக்கப் உபயோகப்படுத்த வேண்டும்.

மென்மையான தோல் (அ) அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய சருமவகை

இதை அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த மாதிரி சருமம் உள்ளவர் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிடும் உணவு, வெளியே போடும் மேக்கப்பும். க்ரீம், லோஷன் போன்றவைகளும் கவனமாக கையாள வேண்டும். சிலருக்கு அன்னாச்சி பழம். தக்காளி, எலுமிச்சை, கத்திரிக்காய் கூட அவர்ஜியை தரும். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியை தரும். புதிதாக மேக்கப் போட்டாலும் அலர்ஜி தான்.

தோலை பாதுகாக்க சில பரமாரிப்பு முறைகளை பார்ப்போம்

இந்த பராமரிப்புக்கு அதிக செலவு ஆகாது.எல்லா பெண்களும் இதை கடைப்பிடிப்பது சுலபம்.

வைட்டமின் சி, தோலுக்கு மிகவும் நல்லது.உடலின் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடிய சக்தி கொண்டது.

சிலருக்கு வெயிலில் சென்றால் உடல் கறுத்துவிடும் (அ) திட்டு திட்டாக படலம் வரும். இது போன்ற குறைபாடுகள் எதனால் வருகிறது என்று பலரக்கும் தெரியாது. இவர்கள் உணவில் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்காய், பெர்பெரி, எலுமிச்சை, கொய்யா அடிக்கடி சேர்த்து கொள்ளவும். ஒரு நாளைக்கு 500மிலி கிராம் அளவுக்கு இந்த வைட்டமின் உடலில் சேர வேண்டும். உணவுப் பொருள் மூலமாக இதைப் பெற முடியும். இல்லையெனில் அதற்கு இணையான வைட்டமின் சி மாத்திரை சாப்பிடவும்.

நெல்லிக்காய், தயிர் பச்சடி அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். நெல்லிக்காய் அதிக அளவு வைட்டமின் சி சத்து கொண்டது. இந்த நெல்லிக்காய் தோலுக்கு சிறப்பான பாதுகாப்பு என்பதை அறிய ஒரு தகவல்.

தோலை பாதுகாக்க மற்றொரு வழி வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுப் பொருள் சேர்த்து கொள்ளவும். இதனை வைட்டமின் சி போல வெளியிலும் தடவலாம்.

பாதாம் பருப்பினை 1-3 தினமும் சாப்பிடவும். இதனால் உடல் பலம் பெற்று சருமம் பளிச்சென்று இருக்கும். இரவில் பாதாம் பருப்பை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை நைசாக அரைத்து பால் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.

வறண்ட சருமம் – முகத்தில் பாலை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். வீட்டில் பன்னீர் இருந்தால் பால் ஏட்டையும் பன்னீரும் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவலாம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உலர்ந்த தோல் உள்ளவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு முகம் அலம்பக் கூடாது. சோப்பு மேலும் தோலை வறண்டு போக செய்துவிடும். பாதம் எண்ணெய் கிளிசரின் போன்றவற்றை அடிக்கடி உபயோகிக்க வேண்டும்.

வரண்ட தோல் உடையவர்களுக்கு தோல் அரிப்பு எடுப்பது சகஜம். ஆனால் இவர்கள் கை நகத்தை ஒட்ட வெட்ட வேண்டும். அப்போது தான் சொரிந்தால் தோலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஏ.சி அறியில் வேலை செய்பவருக்கு வறண்ட தோல் இருந்தால் பிரச்சனை தான். அடிக்கடி உதடு உலர்ந்து போகும். இப்படிப்பட்டவர்கள் கையோடு பெட்ரோலியம் ஜெல்லி, கிளிசரின் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

மிகவும் தோல் வறண்டு போனால் உதடு, கை, ஆகியவற்றில் தடவி கொள்ளவும். வறண்ட தோல் உடையவர் வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தலைசேர்த்து நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து குளிக்கவும். அப்படி தலை குளிக்கும் போது சீயக்காய் பவுடர் (அ) மூலிகை பவுடர் கலந்து குளிக்கலாம்.

உடலுக்கு சோப்பு பயன்படுத்தாமல் கடலைமாவு, மூலிகை பவுடர் தேய்த்து குளிக்கலாம். அதிக மணம் பவுடர், சோப்பு, சென்ட் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

Related posts

உங்க பொன்னான கைகள்…!

nathan

சரணடையும் இராணுவ வீரர்கள்… பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்

nathan

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

இதோ உங்க கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்

nathan

பளிச்சென்ற முகத்திற்கு

nathan