28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
6 31 1464677104
கை பராமரிப்பு

கைகளுக்கு இனி மெனிக்யூர் ஸ்பாவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். எப்படி தெரியுமா?

கைகளைப் பற்றி கவலைப் படுகிறீர்களா? வறண்டு சுருங்கி, கடினமாக, நகங்கள் பலமில்லாமல் இருக்கிறதா? நீங்கள் எண்ணெய் தெரபியை முயற்சி செய்யலாம் . அது என்ன எண்ணெய் தெரபி? மேலும் தொடர்ந்து படியுங்கள்.

எண்ணெய் தெரபி : நகங்கள் மற்றும், கைகளை அழகாக்க, அரோமா ஸ்பா, இப்போது நிறைய பியூட்டி பார்லரில் செய்வார்கள். கைகளுக்கு புத்துணர்வை தந்து, நகங்களை அழகாக்கும். ஆனால் அது காஸ்ட்லி. போதாதற்கு, அங்கே செல்வதென்றால் நேரமிருக்காது.

வீட்டில் வேலையோடு வேலையாக இந்த ஸ்பாவை நீங்களே செய்யலாம். நேரம் மற்றும் பணம் மிச்சமாகும். நகங்களும் பளபளக்கும். கைகள் மிருதுவாகும். இவ்வளவு பலன்களைத் தரும் இந்த் குறிப்பினை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோமா?

வீட்டில் வேலையோடு வேலையாக இந்த ஸ்பாவை நீங்களே செய்யலாம். நேரம் மற்றும் பணம் மிச்சமாகும். நகங்களும் பளபளக்கும். கைகள் மிருதுவாகும். இவ்வளவு பலன்களைத் தரும் இந்த் குறிப்பினை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோமா?

தேவையானவை : சம அளவு கலந்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பாதாம் எண்ணெய் விட்டம் ஈ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் தேயிலை மர எண்ணெய் விட்டமின் ஈ கேப்ஸ்யூல்

செய்முறை : முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து மிதமாக சூடுபடுத்துங்கள். உங்களிடம், மைக்ரோ ஓவன் இருந்தால், அதில் 30 நொடிகளுக்கு வைக்கலாம். அதிக சூடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து, என்ணெயில் போடுங்கள். பின்னர் இந்த எண்ணெயினுள், கைகளை அமிழ்த்துங்கள். சூடு ஆறும் வரை வையுங்கள். இன்னும் தேவையென்றால், மீண்டும் லேசாக சூடு பண்ணி, கைகளை அமிழ்த்துங்கள்.

10 நிமிடங்கள் ஆனபின், கைகளை எடுத்து, மெதுவாக மசாஜ் செய்யுங்கள். உங்கள் கைகளிலேயே எண்ணெய் இருக்குமென்பதால், விரல்களை மெதுவாக உருவி, நகங்களில் வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள்.

பின்னர், துண்டால் கைகளை துடைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வீட்டில் மாய்ஸ்ரைஸர் லோஷன் இருந்தால், அதனை சிறிது கைகளில் போடுங்கள். வாரம் இருமுறை, இரவு தூங்குவதற்கு முன் இப்படி செய்யலாம்.

எண்ணெய் தெரபியின் பலன்கள் : உங்கள் நகங்கள் நீளமாக சீக்கிரம் வளரும். உடைந்து போகாது. விரல்களின் மூட்டுகளில் இருக்கும் கருமை போய்விடும். சுருங்கள் மறைந்து, பூசியது போல் காணப்படும்.

உள்ளங்கைகள் கடினமாக இருந்தால், அதனை மிருதுவாக்கிவிடும். கைகள் சுத்தமாக இருக்கும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நகப்பூச்சுக்களால் ஏற்படும் நச்சுக்கள் வெளியேறிவிடும்.

6 31 1464677104

Related posts

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

கை கால் முட்டுகள் கருப்பா இருக்கா? இந்த டிப்ஸ் படிங்க!

nathan

உள்ளங்கைகள் சொரசொரப்பா இருக்கா? மிருதுவாக்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க !!

nathan

மென்மையான கைகளை பெறுவதற்கு……

nathan

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

nathan