grwww
அசைவ வகைகள்

கிரீன் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்
:
சிக்கன் – அரை கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 கப்
கொத்தமல்லி – 2 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு

ண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
ஏலக்காய் – 5
வரமிளகாய் – 2
தண்ணீர் – 2 கப்
செய்முறை
:
• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• முதலில் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, உப்பு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதி உள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு
பேஸ்ட், உப்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில்
வைத்து நன்கு வதக்க வேண்டும்.
• பிறகு அதில் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி, மசாலாவானது சிக்கனுடன் நன்கு ஒன்று சேர்ந்த
பின்னர், அதில் கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு, பின் தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம்
வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கிரீன் சிக்கன் குழம்பு ரெடி!!!grwww

Related posts

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

nathan

ஸ்பைசி கோங்குரா (புளிச்சக்கீரை) சிக்கன் செய்ய தெரிந்து கொள்வோம்…..

nathan

தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே!

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

இறால் தொக்கு

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

ஸ்பைசியான… இறால் பெப்பர் ப்ரை

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan