29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
201608201342022263 side effect of hair dye color SECVPF
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

கூந்தலுக்கு போடும் சாயம் பல்வேறு பக்க விளைவை ஏற்படுத்தும். அவை என்னவென்று பார்க்கலாம்.

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?
நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம். நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.

சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம்.

இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும் போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும்.

அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும். மீசைக்கும் கலர் சாயம் பூசும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும்.

பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். “தலைமுடி சாயம்” உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.201608201342022263 side effect of hair dye color SECVPF

Related posts

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

மென்மையான கூந்தலுக்கு…

nathan

இள நரை மறையணுமா?

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகமாக முடி கொட்டுவதற்கு நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த செயல்கள்தான் காரணம்…!

nathan

கூந்தல் கருமையான நிறத்துடன் செழித்து வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி உதிர்வதை தடுக்கும் சல்ஃபர் சீரம் பற்றி தெரியுமா?

nathan