28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
lRVQEOR
ஃபேஷன்

பலவகை ஸ்டைல்களில் சேலை உடுத்துங்கள்

இந்தியாவின் பாரம்பரிய உடைகளில் பெண்கள் அணியும் சேலைகளும் பிரசித்தி. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் நம் இந்திய பெண்களின் சேலை கட்டும் விதம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சேலைகளை நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமான தங்களது முறைப்படி கட்டுகின்றனர். சேலைகள் என்றாலே பெண்களுக்கு தனி மகிழ்ச்சி தான். வீட்டில் உள்ள பீரோ முழுவதும் சேலைகளாக வாங்கி அடுக்குவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். அப்படிப்பட்ட சேலைகளை விதவிதமான ஸ்டைல்களில் கட்டுவது எப்படி?

கர்நாடகா பூதேயரா:

கர்நாடக மாநிலம் பீதர் மற்றும் குல்பர்கா மாவட்டத்தில் கட்டப்படும் சேலை. 7.36 மீட்டர் அளவிலான இந்த சேலை, ஏதேனும் விழா, சடங்குகளின் போது நாடோடிகளால் கட்டப்படுகிறது.

கோவா தங்காட்:

வடக்கு கோவாவில் ஆடு மேய்க்கும் சமூகத்தினரால் இதுபோன்ற சேலை கட்டப்படுகிறது. இதன் அளவு 8.30 மீட்டர் ஆகும்.

குஜராத் பார்ஸி:

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற வர்த்தக சமூகத்தினரால் கட்டப்படுகிறது. இந்த சேலை 5.30 மீட்டர் அளவாகும்.

மத்தியப்பிரதேச பாலாகட்:

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் மாரா எனும் சமூகத்தினரால் இத்தகைய சேலை கட்டப்படுகிறது. இதன் நீளம் 8.36 மீட்டர்.

சத்தீஸ்கர் ஸ்டைல்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்திய பகுதிகளில் ஒட்டுமொத்த சமூகத்தினரால் இத்தகைய சேலை கட்டப்படுகிறது. இதன் நீளம் 6.5 மீட்டர் ஆகும்.

உ.பி. சீதா பள்ளூ:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கட்டப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் காட்டப்படும் இந்த சேலையின் அளவு 5.3 மீட்டர்.

பீகார் புர்னியா:

வடகிழக்கு பீகாரில் கிராமப்புறங்களில் இத்தகைய சேலை கட்டப்படுகிறது. இந்த சேலை 4.55 மீட்டர் அளவாகும்.

ஜார்கண்ட் சந்தல் பர்கானா:

வடகிழக்கு ஜார்கண்டில் மஜி, குர்மி மற்றும் இதர பழங்குடியினரால் கட்டப்படும் இந்த சேலையின் அளவு 4.6 மீட்டர் ஆகும்.lRVQEOR

Related posts

நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்

nathan

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika

தக தக தங்கம்!

nathan

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெஷன்…..

sangika

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

nathan

உங்களுக்கேற்ற ஆடையை தேர்வு செய்வது எப்படி?

nathan

கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

sangika