9 27 1464326271
முகப் பராமரிப்பு

முகத்தில் மங்குவா? இனி வெளியே செல்ல கூச்சம் வேண்டாம். இதை ட்ரை பண்ணுங்க

சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால் அதனை மங்கு என்று கூறுவார்கள். அதனை போக்க மருந்து மாத்திரைகளை விட எளிய தீர்வுகள் நம் வீட்டிலேயே இருக்கின்றன.

அதற்கான வழிகளை இங்கே சொல்லியிருக்கிறோம். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.

தேன், பாதாம் : தேனும் பாதாமும் சேர்த்த கலவை மங்குகளை போக்க சிறந்த வழியாகும். பாதாமை ஊற வைத்து தோலினை நீக்கிக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் போடவும். தினமும் இப்படி செய்தால், மங்கு குறைந்து, சருமம் கிளியாராகிவிடும்.

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு சருமத்தில் அற்புதமாக நல்ல விளைவுகளை கொடுக்கும். முக்கியமாக நாள்பட்ட மங்குவையும் போக்கும் குணங்கள் உள்ளது.

உருளைக் கிழங்கிலிருந்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து வாருங்கள். முகம் என்றில்லாமல், உடல் முழுவதும் இந்த சாறினை பூசி, காய்ந்த பின் குளிந்தால், சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.

மஞ்சள் :
சருமத்தில் எந்த விதமான தொற்று ஏற்பட்டாலும் சரி, பிரச்சனைகளில் இருந்தாலும் சரி, அவற்றை தீர்க்க, மஞ்சளை மிஞ்ச எதுவுமில்லை. மஞ்சளை பாலுடன் கலந்து மங்கு இருக்கும் இடத்தில் தினமும் பூசி வாருங்கள்.

சிறிது நாட்களில் மங்கு மற்றும் சருமப் பிரச்சனைகள் காணாமல் போகும். கடைகளில் வாங்கும் மஞ்சள் பொடி பயன் தராது. மஞ்சள் கிழங்கை வாங்கி பொடித்துக் கொள்ளுங்கள். அதுதான் சிறந்தது.

தக்காளி சாறு, ஓட்ஸ் : சரும நிற மாற்றத்தில் இந்த கலவை நன்றாக வேலை செய்யும். நீங்கள் முயன்று பாருங்கள். கட்டாயம் முன்னேற்றம் தரும்.

தேவையானவை :

ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு – தேவையான அளவு

ஓட்ஸை யோகார்ட்டுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தக்காளி சாறு கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை சருமத்தில் ஏற்பட்டுள்ள மங்கு, கரும் புள்ளிகள் மீது நன்றாக தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். தினமும் இவ்வாறு செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காய சாறு, ஆப்பிள் சைடர் வினிகர் : வெங்காயம் கூந்தலுக்கு மட்டுமல்லாமல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நல்ல பலனை அளிக்கும். வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து முகத்தில் போடவும்.

காய்ந்தவுடன் கலவுங்கள். இது சருமத்தில் உள்ள செல்களில் இருக்கும் மெலனின் சுரப்பினை சீர் செய்யும். இதனால் சருமத்தில் உண்டாகும் மங்கு, வெண்மையான திட்டுகள் மறைந்து சருமம் ஒரே மாதிரி காட்சி அளிக்கும்.

ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் :

ஸ்ட்ரா பெர்ரி பழங்களை சதைப் பகுதியை எடுத்து, நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் போட்டு காய விடவும். பின் குளிர்ந்த் நீரில் கழுவுங்கள். நாளடைவில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.

மேலே சொன்ன தீர்வுகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கும். இவற்றுடன் நிறைய நீர் அருந்துங்கள். இவை சரும்த்தில் நச்சுக்களை அகற்றும். கார மசாலா உணவுகளை உண்ணாதீர்கள். தயிர் பால் ஆகியவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மங்கு , மற்றும் வெண் திட்டுகளுக்கு உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதோடு இந்த குறிப்புகளும் நீங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

9 27 1464326271

Related posts

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..?

sangika

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

உங்க முகத்தில் இருக்கும் கருமையை அகற்ற உதவும் சில வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!

nathan

முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை

nathan

முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

nathan

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan