29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
இனிப்பு வகைகள்

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

ரவைக்கு பதிலான சேமியாவில் கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேமியா கேசரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சேமியா – 500 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
தண்ணீர் – 400 மி.லி.
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை :

* சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.

* சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

* பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

* சுவையான சேமியா கேசரி தயார்.

* இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

Related posts

கலர்ஃபுல் தேங்காய் பால்ஸ்

nathan

மஸ்கெற் (கோதுமை அல்வா) – 50 துண்டுகள்

nathan

கலந்த சத்து மாவு பர்பி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை

nathan

நுங்குப் பணியாரம்

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan

இனிப்பு சக்க பிரதமன்

nathan

மைசூர் பாகு

nathan

செய்றது ரொம்ப ஈஸி! சுவையான வெண்ணிலா புட்டிங்

nathan