sl3706
சிற்றுண்டி வகைகள்

சேனைக்கிழங்கு சுக்கா

என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு – 1/4 கிலோ,
பூண்டு – 1 (பெரியது – உரித்து,
இடித்துக் கொள்ளவும்),
காய்ந்த மிளகாய் – 4,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கறி மசாலா – 1/2 ஸ்பூன்,
உடைத்த கடலை (பொடித்தது) – 2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 3 (விழுதாக அரைக்கவும்),
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சேனைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, பூண்டு போடவும். அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, சின்ன வெங்காயத்தின் தோலை மட்டும் உரித்து அப்படியே சேர்க்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும். கலக்கவும். தக்காளி விழுது சேர்த்து உப்பு போடவும். லேசாக தண்ணீர்விட்டு கொதித்த பின் கிழங்கைச் சேர்க்கவும். அதில் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். இறக்கும்போது உடைத்த கடலை தூள் தூவவும். sl3706

Related posts

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

சோயா இடியாப்பம்

nathan

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

சூடான மசாலா வடை

nathan

டோஃபு கட்லெட்

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan