31.3 C
Chennai
Friday, Jun 19, 2026
சரும பராமரிப்பு

குளிர்காலத்தின் வறட்சியை போக்கும் ஜெல்

உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜெல்லை உபயோகப்படுத்தலாம்.

குளிர்காலத்தின் வறட்சியை போக்கும் ஜெல்
நல்ல ஆரோக்கியமான உடல் உள்ளுறுப்புகள் வயதை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளின் இளமை உங்கள் சருமத்தில்தான் பிரதிபலிக்கும். நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதைப் போல், எந்தவித கெமிக்கல்கள் இல்லாத அழகு சாதனங்களை பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமலே இருக்கும்.

உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். ஈரப்பசை குறைந்து, வறட்சி ஏற்படும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜெல்லை உபயோகப்படுத்தலாம். இந்த ஜெல்லை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோற்றுக் கற்றாழை – கால் கப்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள்
புதினா எண்ணெய் – 2 துளிகள்

சோற்றுகற்றாழையின் சதைபகுதியை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய், புதினா மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை கலந்து ஒரு பாட்டிலில் சேகரித்து காற்று பூகாதவாறு மூடி நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடும்.

இதனை குளித்தவுடன் தினமும் போட்டுக் கொள்ளுங்கள். அற்புதமான மாய்ரைஸராக செயல்படும். சுருக்கங்களை போக்கிவிடும். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவற்றை தடுக்கும்.

Related posts

இப்படி தினமும் செய்து வாருங்கள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

nathan

முகம் பொலிவு பெற அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்

nathan

சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

nathan

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் சத்தான உணவுகள்

nathan

மகளிருக்கான இலையுதிர் கால தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

nathan

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

nathan

உங்க சருமம் சிவப்பாக மாறனுமா? வாரம் இருமுறை இந்த பொருளை யூஸ் பண்ணுங்க!!

nathan

கழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் !! எப்படி தெரியுமா?

nathan