இலங்கை சமையல்

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பமான ரவா பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள் :

ரவா – 1கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
வாழைப்பழம் – 1
தேங்காய் துருவல் – கால் கப்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை :

* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.

* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.

* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.

Related posts

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்,

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு நீங்களும் சுவைத்து பாருங்க !!

nathan

கோழிக்கறி (இலங்கை முறை)

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

மங்களூர் மினி கைமுறுக்கு

nathan

இலங்கையரின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி…

nathan

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

nathan

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

nathan