29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
avalkesari
சிற்றுண்டி வகைகள்

அவல் கேசரி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்:

அவல் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்
முந்திரி – 15
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை:

தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.

கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பின் அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.

அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.

சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும்.

நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

நாவில் எச்சில் ஊறவைக்கும் அவல் கேசரி ரெடி.avalkesari

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

nathan

முட்டை பரோட்டா செய்வது எப்படி

nathan

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்…

nathan

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

சுவையான பாசிப்பயிறு குழிப்பணியாரம்

nathan

உழுந்து வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

nathan