13 peanut ladoos
சிற்றுண்டி வகைகள்

வேர்க்கடலை லட்டு

இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான பலகாரங்கள் செய்ய நினைத்தால், வேர்க்கடலை லட்டு செய்யுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இங்கு வேர்க்கடலை லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை – 1 கப் வெல்லம் – 1/2 கப்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும்.

பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று பொடி செய்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் நன்கு அடிக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு, அதனை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இதில் நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வேர்க்கடலையிலேயே ஏற்கனவே எண்ணெய் இருப்பதால், சாதாரணமாக உருண்டைகளாகப் பிடிக்கலாம்.

இறுதியில் அதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் இதனை வைத்து சாப்பிடலாம்.

13 peanut ladoos

Related posts

வேர்க்கடலை லட்டு

nathan

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

மசால் தோசை

nathan

கோதுமை கேரட் அடை

nathan

ஜாலர் ரொட்டி

nathan

சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan