22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1 16 1463384405
தலைமுடி சிகிச்சை

கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது.

அப்படிப்பட்ட உருளைக் கிழங்கு தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. பொடுகு, கூந்தல் உதிர்வதை தடுக்க, நரை முடியை கருமையாக்க, வறண்ட கூந்தலை மிளிரச் செய்ய என எல்லாவற்றிற்கும் இது உபயோகப்படுத்தலாம்.

உருளையை பயன்படுத்தி கூந்தலுக்கு நன்மைதரும் சில டிப்ஸ்களை தொடர்ந்து படித்து, ஃபலோ பண்ணுங்கள்.

உருளைக் கிழங்கு கண்டிஷனர் : தேவையானவை: உருளைக் கிழங்கு -1 முட்டை-1 தயிர்- அரை கப்

உருளைக் கிழங்கை துருவி அதன் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் முட்டை, தயிர் ஆகியவற்றை கலந்து, நன்றாக ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு அடித்துக் கொள்ளுங்கள்.

முதலில் இந்த கலவையை தலையின் வேர்க்கால்களில் நன்கு படும்படி தடவுங்கள். பின் கூந்தல் நுனி வரை முழுவதும் தடவி 20 நிமிடங்கள் அப்படியே காய விடுங்கள். அதன் பிறகு உங்கள் ஷாம்புவை உபயோகித்து தலைமுடியை அலாசுங்கள்.

இதனை 20 நாட்களுக்கு ஒருமுறை உபயோகப்படுத்தலாம். முடியின் வேர்கால்கால்கள் பலம் பெற்று, கூந்தல் மின்னும். அதை கண்கூடாக நீங்கள் காண்பீர்கள்.

நரைமுடிக்கு : உருளைக் கிழங்கின் தோலினை பீலர் அல்லது கத்தியினால் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

அதில் இந்த உரித்த உருளைக் கிழங்கின் தோலினைப் போட்டு 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.அதனை இப்போது வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தபின் , கடைசியாக இந்த நீரினைக் கொண்டு அலசுங்கள். இது கூந்தலுக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதனை வாரம் இரு முறை செய்தால் நரை முடிக்கு நல்ல பலனைத் தருகிறது.

கூந்தல் உதிர்கிறதா? கூந்தல் உதிர்வினைத் தடுக்க அருமையான செய்முறை இது. வேர்கால்கள் பலம் பெற்று, முடி அடர்த்தியாக வளரச் செய்கிறது.

செய்முறை : உருளைக் கிழங்கு சாறு- 3 டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை சதைப் பகுதி- 3 டீஸ்பூன் தேன்-2 டீஸ்பூன்.

மேலே சொன்னவற்றை நன்றாக கலந்து உங்கள் தலைமுடியின் வேர்கால்களில் படும்படி தடவி மசாஜ் செய்யவும். பின் 2 மணி நேரம் ஊற விடுங்கள். அதன் பின் தலையை அலசுங்கள். பெஸ்ட் ரிசல்ட் கிடைக்க, வாரம் 2 முறை செய்து பாருங்கள். அப்புறம் நீங்கள், தரையில் உங்கள் முடிகளை எங்கும் காண முடியாது.

உருளைக் கிழங்கை பயன்படுத்தி செய்யும் இந்த மூன்று டிப்ஸ்களுமே நல்ல பலன்கள் அளிக்கக் கூடியவை. தவறாமல் பின்பற்றுங்கள். பின் முடி உதிர்கிறதே என்ற புலம்பல் உங்களிடம் இருக்காது.

1 16 1463384405

Related posts

ஆண்களே! இதோ வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!

nathan

தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?

nathan

உங்களுக்கு முடி இப்படி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப உடனே இத படிங்க..

nathan

அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும்.தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே என்ன பண்ணினாலும் பொடுகு போகலையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan