29.3 C
Chennai
Tuesday, Jul 22, 2025
How to make delicious puliyodharai
சைவம்

சுவையான புளியோதரை செய்வது எப்படி

கோவில் புளியோதரையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான புளியோதரை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் – 2 கப்
புளி – 100 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :

காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்

வறுத்து பொடிக்க வேண்டியவை :

தனியா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கடலைப்பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

* புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

* புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

* 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

குறிப்பு :

* மீதமிருக்கும் பொடியை வறுவல் ,வத்தக் குழம்புக்கு பயன்படுத்தலாம்.How to make delicious puliyodharai

Related posts

வரகு அரிசி புளியோதரை

nathan

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

தனியா பொடி சாதம்

nathan

சுவையான புதினா புலாவ்

nathan

வாங்கி பாத்

nathan

வெண்டைக்காய் பொரியல்

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan