29.4 C
Chennai
Wednesday, Aug 20, 2025
201607140747505149 Tasty nutritious cabbage rice SECVPF
சைவம்

சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்

முட்டைகோஸ் வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். முட்டைகோஸை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்
தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் – 200 கிராம்
வடித்த சாதம் – ஒரு கப்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்),
மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து. பட்டை, மிளகு – சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

* அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

* இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் ரெடி.201607140747505149 Tasty nutritious cabbage rice SECVPF

Related posts

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

nathan

கீரை தயிர்க் கூட்டு

nathan

பிர்னி

nathan

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

nathan

சுரைக்காய் பால் கூட்டு

nathan

கோவைக்காய் வறுவல்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

nathan

மதுரை உருளைக்கிழங்கு மசியல்

nathan

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

nathan